| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200520b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a ஆடல்வல்லான் (நடராஜர்) |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a உலோகத்தால் செய்யப்பட்ட இந்த நடராசர் திருமேனியானது காலத்தால் பிற்பட்டதாகும். தாமரைப் பீடத்தின் மீது சுற்றிலும் காட்டப்பட்டுள்ள திருவாசியின் நடுவே ஆடல்வல்லான் ஆடுவதாக இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கூத்தரின் நான்கு திருக்கைகளில் பின் வலது கையிலுள்ள உடுக்கை படைப்பையும், பின் இடது கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலையும், முன் வலது கை அபய முத்திரையாக உட்புறத்தை காட்டுவது அருளலையும், முன் இடது கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலையும் குறிக்கின்றன. தூக்கிய பாதமாகிய குஞ்சரபாதம் மற்றும் ஆணவக் குறியீடாகிய அபஸ்மாரனை மிதித்தாடும் ஊன்றிய இடது பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலையும் குறிப்பதாகும். |
| 520 | : | _ _ |a சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு. ஆடல்வல்லானின் ஆடற்கோலமானது ஐந்தொழில்களின் தத்துவத்தை உள்ளடக்கியதென சைவ ஆகமங்கள் கூறுகின்றன. |
| 653 | : | _ _ |a ஆடல்வல்லான், கூத்தன், கூத்தர், நடராஜர், நடராசர், ஐந்தொழில், நடராஜர் தத்துவம், செப்புத் திருமேனிகள், உலோகத் திருமேனிகள், ஐம்பொன் சிலை, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
| 850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 10.9604046 |
| 915 | : | _ _ |a 78.077561 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001532 |
| barcode | : | TVA_SCL_0001532 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |